அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

கன்னியாகுமரி அருகே உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம் செய்தார். பிரபல நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதற்காக அவர் ஒரு விரதமிருந்து கன்னியாகுமரியில் உள்ள முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

 

சாமிதோப்புக்கு சென்ற அவர் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் விக்னேஸ் சிவனுடன் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் நடைபெற்ற ஏடு வாசிப்பிலும் அவர் கலந்து கொண்டார். சாமிதோப்புக்கு நடிகை நயன்தாரா வருகை தந்ததால் அய்யாவழி பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர்.


Leave a Reply