--- --:--:-- --

“நான் இந்தியன்” பாக். மாணவியின் கேள்விக்கு அன்றே பதிலடி கொடுத்தேன்!

1

பந்துவீச ஓடி வருகையில் முஸ்லிம் என்றெல்லாம் நினைக்க மாட்டேன் என்றும் முதலில் நான் ஒரு இந்தியன் என்றும் இர்பான் பதான் தெரிவித்திருக்கிறார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

அந்த போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்களும் சேதமடைந்தன. அப்போது காவல்துறையினர் தடியடியிலும் ஈடுபட்டனர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அரசியல் பழிவாங்கும் விளையாட்டு என்றுமே தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

 

ஆனால் நானும், எனது நாடும் ஜாமியா மில்லியா மாணவர்களை நினைத்து கவலை கொள்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேசிய அவர் தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார். அது என் சொந்த கதையை சொல்கிறேன்.

 

2004ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விளையாட சென்றபோது நான் ராகுல் ராவிட் உள்ளிட்டோர் கல்லூரி ஒன்றுக்கு சென்றோம். அங்கு கூடியிருந்த ஆயிரத்து 500 மாணவர்களிடையே உரையாற்றினோம். அப்போது கோபத்துடன் எழுந்த ஒரு பெண் நீங்கள் முஸ்லிமாக இருந்து கொண்டு ஏன் இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு இந்தியா என் நாடு அதற்காக விளையாட பெருமைப்படுகிறேன், என் முன்னோர்கள் அங்கிருந்தவர்கள், அந்த நாட்டிற்காக விளையாடுவதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று தெரிவித்தேன். அனைவரும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

 

நான் திறந்தவெளியில் பாகிஸ்தானில் அப்படி பேசினேன் என்றால் இந்தியாவில் என் கருத்தை பேச யாருடைய அனுமதியும் எனக்கு தேவையில்லை. நான் பந்துவீச ஓடி வருகையில் முஸ்லிம் என்றெல்லாம் நினைக்கமாட்டேன் முதலில் நான் இந்தியன் என்று தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon