கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய வந்த இருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
விருத்தாசலத்தை அடுத்த மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரக்கை கிராமத்தில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, காலண்டர் வினியோகிக்க இருவர் வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவர்கள் இருவரும் பொருட்களை விநியோகிக்க முற்பட்டபோது பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வேட்டி சேலை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தார்கள் மேடம் இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.