கோழிக்கால் நோய் தாக்கி வெங்காய சாகுபடி பாதிப்பு

கள்ளக்குறிச்சி அருகே 300 ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாலப்பட்டு, அரசம்பட்டு, பாவளம், மோட்டாம் பட்டு ஆகிய பகுதிகளில் அதிக அளவு சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வருகிறது. சின்ன வெங்காயத்தை பயிரிட்டால் 40 நாட்களிலேயே குருத்து காய்ந்து வெங்காயம் அழுகிய நிலைக்கு சென்று உள்ளன.

 

மேலும் கோழிக்கால் நோய் தாக்கியதால் சின்ன வெங்காய பயிர்கள் அழிந்துவருகின்றன. நாட்டில் வெங்காய தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நோய் தாக்கியவர்கள் வெங்காயங்களை அழிவிலிருந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply