ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள்

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தென் சென்னை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 7 முதல் 70 வரை என்ற பெயரில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ரஜினிகாந்தின் 68 ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

 

இதையொட்டி ரஜினி மக்கள் மன்றத்தினர் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ரம்யா என்ற 7 மாத கர்ப்பிணிக்கு சீர்வரிசைகள் செய்து வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தினர். குழந்தைக்கு பெயர் சூட்டு விழா பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான உதவி தொகையை வழங்கினார்.

ஒரு ஜோடிக்கு நிச்சயதார்த்தமும், மற்றொரு ஜோடிக்கு திருமணமும் சீர் வரிசைகளுடன் மண விழாவையும் ரஜினி மக்கள் மன்றத்தினர் நடத்தினர். இறுதியாக ரஜினி பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


Leave a Reply