--- --:--:-- --

தேனி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பைக்கில் சென்றவர் பலி

2

தேனி அருகே வீரபாண்டியில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் அதனை ஓட்டி வந்தவர் எதிரே வந்த லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்த உப்பாறு பட்டியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீரபாண்டி நோக்கி சென்றுள்ளார். அவர்கள் தேனி, குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது குமுளி நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது.

 

இதனை பார்த்த வேல்முருகன் அச்சமடைந்து தமது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த அனைவரும் கீழே விழுந்த நிலையில், எதிரே வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி மற்றும் மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

 

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் விபத்து காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வீரபாண்டி போலீசார் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் லாரியை வேகமாக ஓட்டி வந்த லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon