7 கிலோ மீட்டர் தூரம் இறந்தவரின் உடலை டோலிகட்டி தூக்கி சென்ற மலை கிராம மக்கள்

வாணியம்பாடி அருகே இறந்தவரின் உடலை சாலை வசதி இல்லாத காரணத்தால் சுமார் 7 கிலோமீட்டர் தூரம்வரை தோளில் கட்டி தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்னாமலை எனும் மலை கிராமம் உள்ளது.

 

இந்த மலை கிராமத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அந்த மலை கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. இதனிடையே அங்கு பிழைப்பு தேடி கோவை சென்ற முனுசாமி என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

 

இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரான நெக்னா மலையில் கொண்டு கொண்டுவரப்பட்டது . அங்கு ஏற்கனவே சாலை வசதி இல்லாத காரணத்தால் முனுசாமி உடல் கீழே இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை தோளில் கட்டித் தூக்கிச் செல்லப்பட்டது.

 

இறந்த முனுசாமியின் 7 மாத கர்ப்பிணி மனைவி கணவர் உடலுடன் அழுது கொண்டே சென்றது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Leave a Reply