தேசப்பற்றுக்கும் சமூக சீர்திருத்தத்திற்க்கும், சிறந்த கவி புலமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி பாரதியாரின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நமக்கு எழுச்சியூட்டும் விதமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மற்ற அனைத்தையும் விட நீதியும் சமத்துவமும் மேலானது என நம்பியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கூற்று ஒன்றை மனிதர்களின் அவதியை போக்குவதிலும் அதிகாரம் அளிப்பதிலும் அவருக்கு இருந்த பார்வையை விளக்கப் போதுமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அந்த மாமனிதரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூறுவதாகவும் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.