சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தில் குஷ்புவும் நடிப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படத்தில் அவருக்கு இணையாக நடிகை மீனா நடிக்க உள்ளார் என்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்படத்தில் குஷ்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்க விருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.