பெற்றோர்கள் போதைக்கு அடிமையானதால் சிறுவர்கள் இருவர் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வாசலில் பிச்சை எடுத்து வரும் சம்பவம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.
இவர்களின் தாய் குடி போதைக்கு அடிமையானதால் மகன்களை கவனிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் எப்பொழுதும் குடித்துக்கொண்டே இருப்பதாகவும் அப்பகுதியில் குப்பை பொறுக்கும் ஒருவருடன் சேர்ந்து வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த சிறுவர்கள் காமாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பிச்சை எடுத்து வருகிறார்கள். காமாட்சியம்மன் கோவில் வாயில் அருகே நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த ஆட்டோவில் மூன்று வருடங்களாக தங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருவர்களையும் மீட்டு உரிய கல்வி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமானால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.