அயோத்தி வழக்கின் தீர்ப்பில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கும் உத்தரவை சீராய்வு செய்யக் கோரி மனு செய்யப்போவதாக இந்துமகா சபை தெரிவித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தீர்ப்பில் கூறியுள்ள உச்சநீதிமன்றம் அயோத்தியில் முக்கிய பகுதியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவிட்டது.
இதற்கு எந்த காரணமும் சொல்லவில்லை என்பதால் அதை சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்போவதாக இந்துமகாசபை தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் தெரிவித்துள்ளார். அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என கடந்த மாதம் ஒன்பதாம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்து அமைப்பு தரப்பிலிருந்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக முதன்முறையாக கூறப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பில் இதுவரை 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.