ஆபாசப்படத்திற்கு அடிமையா நீங்கள்? அதனால் வரும் பிரச்சனையா பாருங்க..
ஆபாச படங்கள் பார்ப்பது மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பதோடு பார்ப்பவர்களின் நடவடிக்கைகளையும் மாற்றியமைக்கிறது என்று கனடாவில் ஒரு ஆய்வு தெரிவித்திருக்கிறது. உலகம் முழுக்க இணையதளம் பெரும் வளர்ச்சி பெற்றதிலிருந்து ஆபாச படங்கள் பார்ப்பது ராக்கெட் வேகத்தில் வேகமெடுத்தது.
உலகின் மிகப்பெரிய இலவச ஆபாச தளம் 2018-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 33.5 பில்லியனுக்கும் அதிகமான முறை தேடப்பட்டிருப்பதும் இதனை உறுதிப்படுத்தப்படுகிறது. ஆபாச படங்கள் பார்ப்பது பல்வேறு நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதால் மன உளைச்சல் முதல் பாலியல் வாழ்க்கையில் பாதிப்பு வரை அடுக்கடுக்கான நரம்பியல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆபாச படம் பார்ப்பவர்களின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த கனடாவின் லோபல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஆய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன. மனித உடலில் பாலியல் செயல்பாடுகளுக்கு நமது மூளையில் உள்ள டோபமைன் தான் காரணம்.
ஆபாச படங்கள் பார்க்கும் போது இந்த டோபமைன் அதிக அளவு சுரக்கிறது. இதனால் மென்மேலும் ஆபாசப்படங்களை பார்க்கும் இச்சை தோன்றுகிறது. அதேசமயம் தனி மனிதனின் ஒழுக்கம், மன உறுதி மற்றும் பாலியல் இச்சைகளை மூளையில் உள்ள கார்டெக்ஸ் பகுதி கட்டுப்படுத்துகிறது.
குழந்தைகளின் இந்த பகுதியை வளர்ச்சி அடையாமல் இருக்கும். இதனாலயே குழந்தைகளால் சுயமாக எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.ஆனால் இளம் வயதினரை ஆபாச வீடியோக்களை பார்க்கும் போது இந்த கார்டெக்ஸ் பகுதியும் பாதிக்கப்படுகிறது. இதனால் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்கள் மாறிவிடுகிறார்கள்.

எனவே ஆபாச படங்களை பார்க்கும் வயது வந்தவர்கள் மனதளவில் முடிவெடுக்க முடியாத சிறுவர்களாக இருப்பார்கள் என்றும் கண்டறிந்துள்ளனர். ஆபாச படங்களை பார்ப்பதால் முறையான பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் உணர்வு குறைகிறது.
அதேசமயம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதற்கும் தூண்டுகோலாக இருக்கும் என்றும், ஒருகட்டத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் ஆபாச படங்களுக்கு நமது மூளை அடிமையாகி விடும் என்றும் கணித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆபாச படங்களுக்கும், நரம்பு மண்டலத்திற்கும் இடையிலான தொடர்புகளை கண்டறிய ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளும் இதே போன்ற நரம்பு மண்டலம் சார்ந்த பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆபாச படங்களை பார்ப்பது அப்போதைய நேரத்திற்கான அற்ப சந்தோஷத்தைக் கொடுத்தாலும் பாலியல் திருப்தியை ஒருபோதும் வழங்காது. அதற்கு நேர்மாறாக நரம்பியல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது ஆபாச இணையதளத்தை பார்க்கும் பலருக்கும் பேரதிர்ச்சியை தந்திருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




