நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
நீலகிரி மலை ரயிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாடகைக்கு எடுத்து பயணம் செய்தனர். நீலகிரி மலை ரயிலை தனியாக வாடகைக்கு எடுத்து பயணம் செய்யலாம் என்று தென்னக ரயில்வே அண்மையில் அறிவித்தது.
இதனையடுத்து பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து, ரஷ்யா, அர்ஜென்டினா, அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் 2 லட்சத்து 566 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து குன்னூரில் இருந்து உதவிக்கு பயணம் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




