ஸ்மார்ட் போன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம்…!

தஞ்சாவூரில் மொபைல் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று ஆஃபர் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் செயல்பட்டுவரும் ஒரு மொபைல் கடையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மொபைல் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என கடையின் உரிமையாளர் விளம்பரப் பலகையை வைத்துள்ளார். இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Leave a Reply