வாணியம்பாடியில் வங்கியிலிருந்து பணம் எடுத்து சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை இளைஞர்கள் கொள்ளையடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி கச்சேரி ரோடு பகுதியை சேர்ந்த பாத்திமா என்பவர் தன் மகனின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக வங்கியில் இருந்து ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து விட்டு பேருந்து நிலையம் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பாத்திமாவை பின்தொடர்ந்த இளைஞர்கள் இரண்டு பேர் உடையில் கரை படிந்துள்ளதாக நூதன முறையில் ஏமாற்றி அவரது கைப் பையுடன் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடினர். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கொள்ளை சம்பவம் குறித்து வாணியம்பாடி காவல் நிலையத்தில் அளித்த பாத்திமா புகாரின் பேரில் பணத்தை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.