வெங்காயத்தை தொடர்ந்து, மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடு உயர்வு! மக்கள் தவிப்பு

வெங்காயம் விலையேற்றத்தை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த மாதம் 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயத்தின் விலை இன்று 180 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் மற்ற காய்கறிகள் விலையில் கடுமையான ஏற்றத்தால் அதிகளவு பாதிக்கப்படுவதாக வியாபாரிகளும் பொதுமக்களும் வேதனை தெரிவிக்கிறார்கள்.


Leave a Reply