--- --:--:-- --

ஜி.எஸ்.டி வரியை 9-10% உயர்த்த மத்திய அரசு திட்டம்?

17

எதிர்பார்த்த அளவு வரிவசூல் ஆகாத நிலையில் ஜிஎஸ்டின் வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக வரிவசூல் எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருந்தது.

 

இதனால் வரி வசூலை அதிகரிக்க ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்கள் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜிஎஸ்டின் குறைந்தபட்ச வரியான 5% என்பதை 9 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இது தவிர 12% வரி வரம்பில் உள்ள சுமார் 243 பொருட்களை 18 சதவீதத்திற்கு மாற்றவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon