தமிழகம், புதுவையில் அதிகாலை முதலே மிதமான மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. கிண்டி, அசோக் நகர், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்ததால் குளுமையான சூழல் நிலவியது.

 

திருவாரூர் மாவட்டம் சில பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒருசில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆங்காங்கே மழைநீர் குளம் போல தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய போது தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

 

பின்னர் சிறிது இடைவெளிவிட்டு கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதில் தமிழகம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்கிறது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Leave a Reply