தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை கடத்திச் சென்று, பாலியல் கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்கள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஹைதராபாத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி இரவு, 26 வயது கால்நடை பெண் மருத்துவர் மாயமானார். மறுநாள் காலை அவரது சடலம் எரிக்கப்பட்ட நிலையில். கண்டுபிடிக்கப்பட்டது
விசாரணையில், அந்த பெண் மருத்துவரை கடத்திச் சென்று பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பெண் மருத்துவருக்கு நேர்ந்த இந்தக் கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் பெண் எம்.பி.க்கள் பலர் கொந்தளித்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் சம்பவம் நடந்த மறுநாளே கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலையுண்ட பெண் மருத்துவரின் சடலம் கிடந்த இடத்திற்கு, விசாரணைக்காக குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் நேற்றிரவு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரின் பிடியிலிருந்து 4 பேரும் தப்பி ஓட முயன்றுள்ளனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.