சென்னையில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் சென்று தங்க வளையல்களை திருடிச் சென்ற பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த வாரம் தங்க வளையல்களை வாங்குவது போல வந்த இரண்டு பெண்கள் வளையல்களை பார்த்துவிட்டு டிசைன் பிடிக்கவில்லை எனக்கூறி வெளியேறினர்.
அடுத்தநாள் வளையல்களை கடைக்காரர் சரிபார்த்த போது இரண்டு வளையல் காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வளையல் டிசைன் பிடிக்கவில்லை என்று சென்ற பெண்கள் வளையல்களை திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் இரண்டு பெண்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.