சென்னை ஆலந்தூரில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை ஆலந்தூர் அருகே சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த காரால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மண்ணடியில் சேர்ந்த இரும்பு வியாபாரி சையத் இப்ராகிம். தமது நண்பர் உள்ளிட்ட மூன்று பேருடன் போலுச்சலூரில் உள்ள வீட்டிற்கு காரில் திரும்பியுள்ளார்.

 

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன்புறமாக திடீரென்று கரும்புகை வெளிப்பட்டுள்ளது. இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு அனைவரும் காரில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார். சற்று நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply