--- --:--:-- --

சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

3

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சீமான் தமிழக அரசு குறித்தும் முதலமைச்சரை குறித்தும் தரக்குறைவாக விமர்சித்ததாக தெரிகிறது.

 

அவரது பேச்சு அரசுக்கும் தமிழக முதலமைச்சரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாக எனவே அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் சீமானை தண்டிக்க வேண்டும் எனவும் தமிழக அரசின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon