ராமநாதபுரத்தில் நீதிபதி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறி காவல் உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வணிக குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெனிஃபர் ராணி ராமநாதபுரம் மாவட்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கான ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது நீதிபதி ஜெனிதா காவல் ஆய்வாளர் இளவேனில், உதவி ஆய்வாளர் ஜெனிஃபர் ஆகிய இருவரையும் விசாரணைக் கைதிகள் முன்னிலையில் திட்டி நீதிமன்றத்தை விட்டு வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெனிஃபர் ராணி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்பி வருண் குமார் மற்றும் வணிக குற்ற புலனாய்வு துணை கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி விசாரணை மேற்கொண்டனர். உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில்ஜெனிஃபர் ராணி விடுப்பில் சொந்த ஊருக்கு சென்றார்.
இதற்கிடையே வழக்கமாக நீதிமன்றத்திற்குச் செல்லும் தலைமை காவலர் முருகனை பணியிடை மாற்றம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு உத்தரவிட்டுள்ளார். தலைமை காவலர் முருகன் நீதிமன்றத் திற்கு செல்லாத நிலையில் உதவி ஆய்வாளர் ஜெனிஃபர் ராணி சென்றுள்ளார்.
அப்போது முருகன் ஏன் வரவில்லை எனக் கூறி நீதிபதி ஜெனிதா உதவி ஆய்வாளர் ஜெனிஃபர் ஆணையை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.