சிங்களர்களின் விருப்பத்திற்கு எதிராக ஈழத்தமிழர்களுக்கு முழு அதிகாரங்களை அளிக்க முடியாது என இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு கோட்டபாய ராஜபக்ஷ முதன்முறையாக இந்தியாவில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது தி ஹிந்து ஆங்கில நாளேட்டிற்கு பேட்டி அளித்த கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் பிரச்சினைகளை விடுத்து தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளார்.
முழுமையான அதிகாரப் பகிர்வு என அழுத்தம் கொடுக்கிறார்கள் இதனால் அங்கு நிலைமை மாறிவிடவில்லை என கூறியுள்ளார். முழுமையான அதிகாரப் பகிர்வு தொடர்பாக 1987ஆம் ஆண்டு இலங்கை அரசமைப்பில் கொண்டுவரப்பட்ட திருத்தம் நடைமுறைப்படுத்த படாது என கோட்டாபய திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சிங்களர்களின் விருப்பத்திற்கு எதிராக ஈழத்தமிழர்களுக்கு முழு அதிகாரங்களை அளிக்க முடியாது என தெரிவித்துள்ள அவர் தமிழர் பகுதியை முன்னேற்ற வேண்டாம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டாம் என எந்த சிங்களரும் கூறப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.