டாலரை விழுங்கிய இரண்டரை வயது குழந்தை!40 நிமிடத்தில் வெளியே எடுத்த மருத்துவர்கள்!

இரண்டரை வயது குழந்தை விழுங்கிய செயின் டாலரை 40 நிமிடத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் சேலத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் இரண்டரை வயது மகள் செயின் டாலரை விழுங்கியதையடுத்து குழந்தையை தனியார் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர். அப்போது குழந்தை விழுங்கிய செயின் டாலரை எண்டோஸ்கோப்பி மூலம் 40 நிமிடத்தில் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

 

பின்னர் பேசிய மருத்துவர் சிவசங்கர், இதுபோன்று குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால் வாழைப்பழம் கொடுப்பதை தவிர்த்து, குழந்தையை மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டுவரவேண்டும் என்றும் கூறினார்.


Leave a Reply