--- --:--:-- --

பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நண்பன்!

3

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று விளையாட்டுத்தனமாக பூங்காவிற்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை நிகழ்ந்துள்ளது.

 

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி நண்பர்களுடன் கடந்த 26ஆம் தேதி அருகில் உள்ள பூங்காவில் நடந்த நண்பர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளார். அதுவரை நட்புடன் பேசி வந்த நண்பர் மணிகண்டனின் செயலில் திடீர் மாற்றம் தெரிந்துள்ளது.

 

தொடர்ந்து மாணவியை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், இந்த சம்பவத்தை நண்பர்களின் உதவியோடு செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து வீட்டிற்கு திரும்பிய மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து ஆர்எஸ் புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன் மற்றும் நாராயணமூர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இதில் ராகுல் என்ற மாணவர் மட்டும் சிரார் என்பதால் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை என்ற தகவலினை காவல்துறை மறுத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon