உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய திமுக
உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த புதிய மனுவில் தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே அந்த மாவட்டங்களிலும் உரிய முறையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு தொகுதி மறுவரையரை செய்யவில்லையெனில் பல தவறுகள், குழப்பங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தொகுதி மறு வரையறை பணிகள் நிறைவு செய்து முடித்து அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை முடித்த பின்பே உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அதுவரை உள்ளாட்சித் தேர்தலுக்கான பட்டியலை வெளியிட கூடாது என்றும், உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




