கள்ளக் காதலியுடன் உல்லாசம்! நிர்வாணமாக ஓட்டம்! ஏன்?

சென்னையில் நிர்வாணமாக சாலையில் ஓடிய இளைஞர் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலியின் வீட்டிற்கு சென்ற அவர் நிர்வாணமாக வெளியே தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது.

 

சுப்பிரமணியபுரம் படத்தில் உள்ள காட்சிபோல் வீட்டிற்கு வெளியில் ஆள் வந்தவுடன் பின்பக்கமாக கள்ளக்காதலியின் வீட்டிலிருந்து நிர்வாணமாக இளைஞர் ஒருவர் வெளியே ஓடி வந்து போலீசில் சிக்கியுள்ளார்.

 

சென்னையில் உள்ள காமராஜர் சாலை காந்தி நகர் பகுதிகளில் நள்ளிரவில் நிர்வாணமாக கையில் கத்தியுடன் ஒருவர் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிசிடிவி ஒன்றும் வெளியாகி கத்தியுடன் சுற்றித்திரியும் மர்மநபர் என்று வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது.

 

இந்நிலையில் அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள தனது கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று விட்டு உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளார். அப்போது வெளியில் யாரோ வந்ததால் நிர்வாணமான நிலையிலேயே பின்பக்கமாக ஓடி விட்டதாக கூறியுள்ளார்.

 

பின்னர் தனது உடைகளையும் செல் போனையும் எடுக்க மீண்டும் அங்கு சென்றதாகவும், அந்த இளைஞர் கூறியுள்ளார். இதையடுத்து அங்குள்ள போலீசார் அவருக்கு அறிவுரை கூறியும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Leave a Reply