போலீசாரின் ரோந்து பணிக்காக நவீன எலக்ட்ரிக் பைக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர சென்னை காவல் துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைமேடையில் காவலர்கள் வேகமாக செல்வதற்காக போலீசாருக்கு பிரீகோ எனப்படும் நவீன வாகனங்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு இந்தியாவிலேயே முதன் முறையாக நவீன எலக்ட்ரிக் பைக்குகள் வழங்க சென்னை பெருநகர காவல் துறை திட்டமிட்டுள்ளது.
மெரினாவில் 10 பைக்குகளும் தியாகராயநகரில் சோதனை முறையில் 10 பைக்குகளும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த பைக்குகள் சுமார் 8 மணி நேரம் வரை தொடர்ந்து இயங்க கூடியவை.
இந்த வாகனத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் எளிதாக போலீசார் செல்ல முடியும். இந்த வாகனங்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரிசீலனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.