லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூர் முருகனை சிறையில் அடைக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தேடப்பட்டு வந்த திருவாரூர் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அம்மாநில காவல்துறையினர் விசாரணைக்கு பின் திருவாரூர் முருகனை கைது செய்த தமிழக காவல்துறையினர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் திடீரென பேச ஆரம்பித்த முருகன், தாம் ஒரு திறமையான தயாரிப்பாளர் என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.