சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்தார். கோடம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பார்வதி அம்மாள் என்பவரின் வீடு அமைந்துள்ளது.
இவர் நேற்று இரவு வீட்டில் சமைத்து கொண்டிருந்தபோது திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதில் மேற்கூரை சிதறி அருகில் உள்ள வீடுகளிலும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களிலும் விழுந்தது. மேலும் சமைத்துக் கொண்டிருந்த பார்வதி அம்மாளும் சிலிண்டர் வெடித்ததில் பலத்த காயம் அடைந்தார்.
தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பார்வதியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து எப்படி ஏற்பட்டது என விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள் :
ரூ.500 கோடி முதலீடு: CM முன்னிலையில் ஒப்பந்தம்..!
திருப்பூருக்கு அழைத்து வரப்படும் மகாவிஷ்ணு..!
வெள்ளையன் மறைவு.. தூத்துக்குடி கடைகள் அடைப்பு..!
காய்ச்சலால் உயிரிழந்த சிறுவன்..அச்சத்தில் கிராம மக்கள்..திடீர் முகாம்..!
லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..3 வயது குழந்தை பலி..!
இளைஞர்களுக்கு மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்