இப்படியெல்லாமா சினிமா எடுப்பீர்கள்? – அர்ஜூன் ரெட்டியை வறுத்தெடுத்த பார்வதி

இந்திய சினிமா நடிகர்கள் கலந்துகொண்ட சினிமா ரவுண்ட் டேபிள் பேட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், குரானா ,மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவரகொண்டா, ஆலியா பட், பார்வதி மற்றும் விஜய் சேதுபதி கலந்து கொண்டனர்.

 

தங்களுக்கான சினிமா புரிதல் குறித்தும் சினிமாவின் தற்போதைய நிலை குறித்து கருத்துக்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இதில் பேசிய மலையாள நடிகை பார்வதி திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களிடம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அந்த கதாபாத்திரங்கள் எப்படி இயல்பாக கொண்டு சேர்க்கப் படுகின்றன என்பது குறித்து பேசினார்.

 

குறிப்பாக அர்ஜுன் ரெட்டி மற்றும் ஆங்கிலத் திரைப்படமான ஜோக்கர் படத்தை முன்னெடுத்து பேசினார் பார்வதி. அதில் வறுத்து எடுத்து விட்டார். சினிமாக்கள் பெண் வெறுப்பை கொண்டாடுவதற்கும் அதன் பிரதிபலிப்பு இருக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்து பேசினார்.

 

அதில் சமூகத்தில் உள்ள பெண் வெறுப்பை சினிமாக்கள் கொண்டாடுவதற்கும் பிரதிபலிக்கும் இடையே மெல்லிய கோடுதான் இருக்கிறது. பெண் வெறுப்பு உள்ள ஒரு ஆண் சினிமாவில் பெண்ணிடம் அத்துமீறிகிறார் என்றால் அது பார்வையாளர்களுடன் கைதட்டல் வாங்குகிறது என்றால் அங்கு பெண் வெறுப்பு கொண்டாடப்படுகிறது என்பது ஆகும்.

சினிமா என்பது வசனங்கள் கொண்டவையாக இருக்க வேண்டும். ஆனால் அவை பார்வையாளர்களுக்கு இது தான் சரி என்ற ஒரு விஷயத்தை உட்புகுத்தி விடுகிறது. அதனை எழுதிய எழுத்தாளர், இயக்குனர் ஆகியோர் பெண் வெறுப்பை கொண்டாடுகிறார்கள் என்று பொருள்.

 

அதே வேளையில் அதே போன்ற ஒரு பெண் வெறுப்பு காட்சி கைதட்டலை வாங்காமல் இது சரியா தவறா என்ற கேள்வியை பார்வையாளனிடம் எழுப்பினால் அது சரியான சினிமாவாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் ஆங்கிலப் படமான ஜோக்கர் திரைப்படத்தில் நடிகர் பல கொலைகளை செய்தாலும் அந்த கதாபாத்திரத்தை பின்தொடர வேண்டும் என்றோ பாராட்ட வேண்டும் என்று தோன்றவில்லை.

 

அதே வேளையில் அர்ஜுன்ரெட்டியில் காதலர்களிடையே கன்னத்தில் அறைந்து கொள்வதை காட்டுகிறார்கள். அதற்கு யூடியூபில் சென்று பார்த்தால் மக்கள் ஆதரவாக கமெண்ட் செய்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் வன்முறையை தூண்டுகிறார்கள் என்று தெரிவித்தார்.

 

தெலுங்கில் வெளியான அர்ஜுன்ரெட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பின்னர் அது இந்தியிலும், தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த சினிமா ரவுண்ட் டேபிள் பேட்டியில் அர்ஜுன் ரெட்டி நடிகர் விஜய் தேவரகொண்டா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பார்வதியின் இந்த தைரியமான பேச்சு இணையத்தில் ஹிட்டடித்து உள்ளது. இணையவாசிகள் பலரும் பார்வதிக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.


Leave a Reply