வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் குமரியில் கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் ஏழு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.