உஷார் மக்களே..! பாலில் நச்சுத்தன்மையில் தமிழகம் முதலிடமாம்..!! மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்

இந்தியாவிலேயே, தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் தான் நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் பாக்கெட் பால் கலாச்சாரம் இப்போது அதிகரித்து விட்டது. கறந்த பாலை சில மணி நேரத்தில் அப்படியே விநியோகித்த காலம் மலையேறிவிட்டது. பாக்கெட்டுகளில் அடைத்து, ஒரு சில நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்க சில ரசாயனப் பொருட்களை கலப்படம் செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது. அது மட்டுமின்றி, கலப்பின பசுக்கள் பெருக்கம் அதிகமாகி, கூடுதல் பால் உற்பத்திக்காக, பசுக்களுக்கு வீரிய ஊசி மருந்துகள் செலுத்துவதும் சகஜமாகி விட்டது. இதனால் பாலின் தரம் கெட்டு, அதில் நச்சுத்தன்மையும் அதிகமாக உள்ளதாக நாடு முழுவதும் பரபரப்பான புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், நாட்டில் விநியோகிக்கப்படும் பாலின் தரம் குறித்தும், நச்சுத்தன்மை குறித்தும் , தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்.பி., டி.ஆர்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

 

தமிழகம், டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்களில் விநியோகிக்கப்படும் பாலில் அப்ளோடாக்சின் எம்1 என்ற நச்சுத் தன்மை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது அனுமதிக்கப்பட்ட நச்சுத்தன்மையை விட அதிகமாகும்.
இதில் தமிழகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 551 பால் மாதிரிகளில் 88 மாதிரிகளில் இந்த நச்சுசத்தன்மை இருப்பது, மத்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணயம் அமைப்பு சார்பில் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி விநியோகிக்கப்படும் பாலில் அதிக நச்சுத்தன்மை உடைய பால் விநியோதிக்கப்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், அடுத்தடுத்த இடங்களில் டெல்லி மற்றும் கேரளா இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இந்த அதிக நச்சுத்தன்மையுடைய பாலை தொடர்ந்து குடிப்பதனால் கேன்சர் நோய் அபாயம் உள்ளதாக ஏற்கனவே பல முறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், உஷார் மக்களே.. உஷார்


Leave a Reply