தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை குறைந்து நவம்பர் 25 முதல் மழை மீண்டும் அதிகரிக்கும் எனவும் புவியரசன் கூறினார்.


Leave a Reply