--- --:--:-- --

ப.சிதம்பரத்திடம் 2 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி

12

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திடம் இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார். சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்திருக்கும் நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை.

 

இந்நிலையில் அவரிடம் மீண்டும் இரண்டு நாட்கள் விசாரணை நடத்த அனுமதி கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிபதி சிதம்பரத்திடம் நாளை மற்றும் நாளை மறுநாள் திகார் சிறையில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon