தென்பெண்ணையின் குறுக்கே கர்நாடகா அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாதை கண்டித்து 5 மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் 4 பேர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

தென்பெண்ணையில் தமிழக அரசின் உரிமையை விட்டு தந்ததாகக் கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர். தர்மபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் முன்னாள் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தென்பெண்ணை ஆற்றின் கர்நாடகம் அணை கட்டுவதை தவிர்க்க தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று ஆர்ப்பாட்டத்தின்போது வலிறுத்தப்பட்டது.

 

கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் ஏராளமான திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடங்கிய பத்து நிமிடத்தில் மழை வந்ததால் ஆர்ப்பாட்டம் முடிக்கப்பட்டது.

 

விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக,கர்நாடக அரசுகளை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


Leave a Reply