காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் . ராமதாஸை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல் நலம் விசாரித்தார்.
பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையும், பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று, டாக்டர் ராமதாஸை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.