--- --:--:-- --

நள்ளிரவில் கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடிகள் கைது

11

சென்னை மயிலாப்பூரில் நள்ளிரவில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேரை ரோந்து சென்ற காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று இரவு அம்பேத்கார் பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது 3 பேர் கைகளில் கத்திகளுடன் போதையில் சுற்றி திரிவதை பார்த்துள்ளனர்.

 

அவர்கள் மூவரையும் விரட்டி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த பரத், பவித்ரன், பாஸ்கரன் என்பது தெரியவந்தது. இதில் பரத் மீதும் பாஸ்கர் மீதும் கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக போலீசார் கூறினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon