தாஜ்மஹாலை கண்டு ரசிக்க புதிய வியூ பாயிண்ட் திறப்பு!

தாஜ் மஹாலின் அழகை நிலவொளியில் கண்டு ரசிக்கும் வகையில் புதிய பகுதியை உத்தரபிரதேச அரசு திறந்துள்ளது. மேக்தா பாக் தாஜ் வியூ பாயிண்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இடத்திற்கு அனுமதி கட்டணமாக 20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய வியூ பாயிண்டை திறந்து வைத்துப் பேசிய மாநில அமைச்சர் கிரிராஜ் சிங் தர்மேஷ் இதன்மூலம் தாஜ்மஹாலின் அழகை சுற்றுலா பயணிகள் புதிய கோணத்தில் கண்டு ரசிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

 

இதை போல் மேலும் சில வியூ பாயிண்டுகளை முடிவு செய்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply