முதல் டெஸ்ட் கிரிக்கெட் – 150 ரன்களுக்குள் வங்கதேசத்தை சுருட்டிய இந்தியா

இந்தூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், இந்தியாவின் அபார பந்துவீச்சால் முதல் இன்னிங்சில், வங்கதேச அணி 150 ரன்களில் சுருண்டது.

 

இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட், மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் திணறினர்.

 

தொடக்க வீரர்கள் இம்ருல் கைஸும், இஸ்லாமும் தலா 6 ரன்களுக்கு, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா பந்துவீச்சுகளில் ஆட்டமிழந்தார்கள். முகம்மது மிதுன் முகமது ஷமி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். எனினும், அணியின் கேப்டன் மொனுமில் ஹக்யூ, பொறுப்பாக ஆடினார். ரகீம் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

 

இறுதியில் வங்கதேச அணி, 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து ஆல்- அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


Leave a Reply