காங்கிரசின் முழு தலைமையையும் மீண்டும் சோனியா காந்தியே ஏற்கவேண்டும்

காங்கிரஸ் கட்சியில் நிலவும் நிலையற்ற சூழலை முடிவுக்கு கொண்டுவர சோனியாகாந்தி தற்காலிக தலைவராக அல்லாமல் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

 

சோனியாகாந்தி இனியும் தற்காலிக தலைவராக இருக்க கூடாது என்று முழுமையான தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

 

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து தற்காலிக தலைவராக சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு செய்யப்பட்டார்.


Leave a Reply