--- --:--:-- --

காவிரி தடுப்பணையில் 100 அடிக்கு உடைப்பு…!

5

ஈரோடு மாவட்டம் பாச்சூரில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் கரையோரத்தில் சுமார் 100 அடி நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டதால் ஈரோடு- நாமக்கல் மாவட்டத்திற்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாச்சூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை மூலம் 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

 

எனினும் இந்த அணையின் உள்ள பாலத்தின் வழியே ஈரோடு – நாமக்கல் இடையே வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்நிலையில் தடுப்பணையின் கரையோரம் உள்ள சுமார் 100 அடி நீளம் மற்றும் 60 அடி அகலத்திற்கு உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.

 

இதையடுத்து உடனடியாக பாலத்தின் வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தொடர்ச்சியான மண்ணரிப்பைத் தடுக்கும் வகையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் 10 ஆயிரம் கன அடி நீர் இரண்டு மதகுகள் வழியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டிருக்கிறது.

 

இதனை தொடர்ந்து கரையை பலப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது கரை உடைப்பு ஏற்பட்ட அதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon