சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது மற்றும் ரபேல் விமான ஒப்பந்தம் முறைகேடு புகார் என, இரண்டு முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், கேரள மாநிலத்தில் உள்ளது. இங்கு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரி, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், 2006இல் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை கோவிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது என்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை முடிந்து, நாளை ( நவ. 14), உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
அதேபோல், ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பாக மறுசீராய்வு மனு மீது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 பேர் அமர்வு, நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.