ஆளை விடுங்கப்பா! நான் திமுகவிலேயே இல்ல… ஹெச். ராஜா சந்திப்புக்கு பின் அழகிரி ‘டென்ஷன்’

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை, மு.க. அழகிரி சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

காரைக்குடியில் உள்ள ஹெச். ராஜாவின் இல்லத்திற்கு திடீரென வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, ஹெச்.ராஜாவுடன் தனியறையில் சந்தித்து பேசினார். உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தனி அறையில் ராஜாவுடன், அழகிரி என்ன பேசினார் என்பதை அறிய, வெளியில் செய்தியாளர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

 

ஹெச். ராஜாவை சந்தித்து வெளியே வந்த செய்தியாளர்கள் அழகிரியை சூழ்ந்து சந்திப்பு பற்றி கேட்டனர். அதற்கு அவர், ஹெச்.ராஜாவின் மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. என்னால் அந்த திருமணத்திற்கு வர இயலாது என்பதால் முன்கூட்டியே வந்து செல்கின்றேன் என்றார்.

 

திமுகப் பொதுக்குழு பற்றி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்ப, அழகிரி டென்ஷன் ஆனார். நான் திமுகவிலேயே இல்லை. என்னை ஏன் கேட்கிறீர்கள். ஆளை விடுங்கப்பா என்றபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஹெச்.ராஜா -மு.க. அழகிரி சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Leave a Reply