திருமணமான பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து பாலியல் வன்கொடுமை
சென்னை விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணை ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் குமார் என்பவர் தனது நண்பர் ரமேஷ் குமார் என்பவருடன் சேர்ந்து விருகம்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் அதனை தங்கள் செல்போனில் படம் பிடித்து மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.மேலும் அந்த பெண்ணின் 3 சவரன் தங்க சங்கிலியையும் பறித்துள்ளனர். இந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவர அவர்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அப்போது நகை பறிப்பு புகாரை மட்டும் பெற்றுக் கொண்ட போலீசார், நகைக்காக 90 ஆயிரம் ரூபாய் பெற்று தருவதாக கூறி முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் பெற்று தந்துள்ளார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




