--- --:--:-- --

ரூ.700 கோடி மதிப்பில் முதலீடு : அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்து

3

தமிழகத்தில் சுமார் 700 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்தானது.

 

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் சிகாகோவில் இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பு சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொண்டு தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக உரையாற்றினார்.

 

இந்த நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு உட்கட்டமைப்பு மற்றும் உறைவிட நிதிக்கு சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் சிகாகோவில் உள்ள மெட்ரோபாலிடன் ஏசி ஃபேமிலி சர்வீசஸ் தேனியில் மூத்த குடிமக்களுக்கான மையம் ஒன்று தொடங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியின் போது தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon