வளர்ப்பு முயல்களை முதுமலை வனப்பகுதியில் விட்ட 3 பேருக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்
கோவையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு முயல்களை முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விட்ட 3 பேருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு பகுதியில் வளர்ப்பு உயிரினங்களை விட அனுமதி இல்லை.
இந்நிலையில் தொரப்பள்ளி கார்க்குடி வழியாக லாரியில் வந்த 3 பேர் நூற்றுக்கணக்கான வளர்ப்பு முயல்களை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். அந்த முயல்களை பிடித்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கோவை தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ், மதன், பழனிசாமி என்பது தெரியவந்தது. கோவையை சேர்ந்த சேகர் புஷ்பாகர் என்பவர் தோட்டத்தில் இந்த முயல்கள் வளர்க்கப்பட்டு வந்ததும், முயல்களின் எண்ணிக்கை அதிகமாகி பராமரிக்க சிரமம் ஏற்பட்டதால் அவற்றை லாரியில் ஏற்றி வனபகுதியில் ஆங்காங்கே விட்டு செல்வதற்காக அவர்கள் வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து முயல்களை வனப்பகுதியில் விட்டதாக அந்த மூன்று பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புலிகள் காப்பகத்தின் துணை கலைஇயக்குனர் செண்பக பிரியா உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




