இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை இட மாற்றம் செய்யக்கோரி வருவாய் துறை பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, தாசில்தார்கள் உள்ளிட்ட வருவாய் துறை ஊழியர்களிடம் கடந்த 3 ஆண்டுகளாக விரோதப் போக்கை கடைபிடித்து வருவதாக தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

மன உளச்சல் ஏற்படுத்தும் மாவட்ட வருவாய் அலுவலரை உடனடியாக பணியிட மாறுதல் செய்யக்கோரி, தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் நேற்று காலை தொடங்கியது. தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்க இராமநாதபுரம் மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார்.

 

மாவட்ட செயலாளர் தமீம் ராஜா, மாவட்ட இணை செயலாளர் காசிநாததுரை, மாவட்ட பொருளாளர் ஹரி சதீஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராமநாதபுரம், பரமக்குடி,ராமேஸ்வரம், கீழக்கரை,
கடலாடி, கமுதி, முதுகுளத்தூர்,ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய 9 தாலுகா வருவாய் துறையினர் பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் வருவாய் துறை பணிகள் பாதித்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.


Leave a Reply