தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என்று சொன்ன ரஜினிகாந்த் என்ன அரசியல் கட்சித்தலைவரா? என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டார்.
இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும். அதிமுகவை பொருத்தவரை, நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். அதிமுகவில் இணைவது குறித்து அமமுகவின் புகழேந்தி கடிதம் அதுபற்றி முடிவெடுக்கப்படும்.
தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என்று சொன்ன ரஜினிகாந்த் என்ன அரசியல் கட்சித்தலைவரா? அவர் ஒரு நடிகர் தான். தமிழக அரசியலில் வெற்றிடம் என தொடர்ந்து அதையே அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது இடைத்தேர்தல் வெற்றி மூலம் நிரூபணமாகியுள்ளது என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.